Merkae Merkae Merkae Thaan Song Lyrics
Merkae Merkae Merkae Thaan Song Lyrics – The lyrics of the song “Merkae Merkae Merkae Thaan” from the film Kanda Naal Mudhal are performed by Shankar Mahadevan and Sadhana Sargham. The lyrics are authored by Thamarai, and the music composition is by Yuvan Shankar Raja.
Singers : Shankar Mahadevan and Sadhana Sargham
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Thamarai
Movie: Kanda Naal Mudhal
Merkae Merkae Merkae Thaan Song Lyrics – Tamil
ஆண் : லைலை லைலை
லைலைலே லாஹி லாஹி
லைலைலே மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
பெண் : சுடும் வெயில்
கோடைக்காலம் கடும் பனி
வாடைக்காலம் இரண்டுக்கும்
நடுவே ஏதும் காலம் உள்ளதா
பெண் : இலையுதிர் காலம்
தீர்ந்து எழுந்திடும் மண்ணின்
வாசம் முதல் மழைக்காலம்
என்றே நெஞ்சம் சொல்லுதே
ஆண் : ஓ மின்னலும்
மின்னலும் நேற்று வரை
பிரிந்தது ஏனோ பின்னலாய்
பின்னலாய் இன்றுடன்
பிணைந்திடத் தானோ
லைலை லைலை
லைலைலே லாஹி லாஹி
லைலைலே மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
ஆண் : ஓ கோபம் கொள்ளும்
நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம்
இல்லா வானம் பெளர்ணமியாய்
தோன்றும் அதே நிலா
பெண் : இனி எதிரிகள்
என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா
வேர்களில்லை நதியை
வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
ஆண் : மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள்
உதித்திடுமே லைலை லைலை
லைலைலே லாஹி லாஹி
லைலைலே
ஆண் : வாசல் கதவை
யாரோ தட்டும் ஓசை
கேட்டால் நீதான் என்று
பார்த்தேன் அடி சகி பெண்கள்
கூட்டம் வந்தால் எங்கே நீயும்
என்றே இப்போதெல்லாம் தேடும்
எந்தன் விழி
பெண் : இனி கவிதையில்
கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும்
வேகமோ அட தேவைகள் இல்லை
என்றாலும் வாய் உதவிகள் கேட்டு
மன்றாடும் மாட்டேன் என நீ
சொன்னால் தாங்குமோ
ஆண் : மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள்
உதித்திடுமே லைலை லைலை
லைலைலே சூரியன்கள்
உதித்திடுமே மின்னலும்
மின்னலும் நேற்று வரை
பிரிந்தது ஏனோ பின்னலாய்
பின்னலாய் இன்றுடன்
பிணைந்திடத் தானோ
Merkae Merkae Merkae Thaan Song Lyrics – English
Male : Lailai lailai lailailee laahilaahi lailaileee
Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae
Female : Sudum veyil kodaikaalam
Kadum pani vaadai kaalam
Irandukkum naduvae yedhum kaalam ulladha
Female : Ilaiyudhir kaalam theernthu
Ezhunthidum mannin vaasam
Mudhal mazhaikkaalam endre nenjam solluthae
Male : Oh minnalum minnalum netru varai pirinthathu yeno
Pinnalaai pinnalaai indrudan pinainthida thaano
Lailai lailai lailailee laahilaahi lailaileee
Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae
Male : Oh..kobam kollum neram
Vaanam ellaam megam
Kaanaamalae pogum ore nila
Oh..kobam theerum neram
Megam illaa vaanam
Pournamiyaai thondrum adhae nilaa
Female : Ini edhirigal endre evarum illai
Pookkalai virumbaa vergal illai
Nadhiyai veezhthum naanal illaiyaae
Idhu neerin thozhil kaippodum
Oru chinnath theeyin kadhai aagum
Thiraigal inimel thevai illaiyae
Male : Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae
Lailai lailai lailailee laahilaahi lailaileee
Male : Vaasal kadhavai yaaro thattum osai kettaal
Neethaan endru paarthen adi sagi
Pengal koottam vandhaal engae neeyum endrae
Ippothellaam thedum endhan vizhi
Female : Ini kavidhaiyil kaigal nanainthidumo
Kaatrae siragaai virinthidumo
Nilavin mudhugai theendum vegamo
Ada thevaigal ilai endraalum
Vaai udhavigal kettu mandraadum
Maatten ena nee sonnaal thaangumo
Male : Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae
Lailai lailai lailailee sooriyangal udhithidumae
Minnalum minnalum netru varai pirinthathu yeno
Pinnalaai pinnalaai indrudan pinainthida thaano